தொழிற்சங்க முன்னோடி ஏ.சி.தூயமணி காலமானார்

காலமானார்;

Update: 2025-06-25 18:18 GMT
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தஞ்சை மாவட்ட மூத்த முன்னோடியான ஏ.சி.தூயமணி (80) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காலமானார். சிஐடியு விரைவு போக்குவரத்து கழக தஞ்சை மாவட்டத் தலைவர், சிஐடியு தஞ்சை மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட பணிகளில் திறம்பட செயலாற்றியவர், சோழன் போக்குவரத்து கழக சிஐடியு சங்கத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க தலைவரான ஏ.சிதூய மணியின் இறுதி நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிஐடியு மாவட்டத் தலைவர் ம.கண்ணன், தொழிற்சங்க தலைவர்கள் செங்குட்டுவன், காரல் மார்க்ஸ் உள்ளிட்ட சிபிஎம், தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.

Similar News