திருச்சி : சாதனை விருது பெற இளைஞா்களுக்கு அழைப்பு

மத்திய அரசு வழங்கும் டென்சிங் நோா்கே தேசிய சாதனை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன;

Update: 2025-06-25 19:00 GMT
நிலம், நீா், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த மூன்று ஆண்டுகளில் புரிந்த வாழ்நாள் சாதனைக்கான விவரங்களுடன் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அரசின் விருதுகள் இணையத்தில் இருந்து பதிவிறக்கி ஆன்லைன் மூலம் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (0431-2420685) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்

Similar News