திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது;

Update: 2025-06-25 19:44 GMT
திருச்சி தெற்கு மாவட்ட திமுக BLA 2 பாக நிலை முகவர்கள் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றதுஇதில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த BLA2 பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா இழிவுபடுத்தப்பட்டார்கள். அதை பார்த்து திமுக கொந்தளித்த பிறகு, அதிமுகவினர் கண்டன அறிக்கை விட்டார்கள். இந்த நிலையில் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள்" என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது.கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்தார்.

Similar News