ஒசூர்: அமாவாசை ஒட்டி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை.

ஒசூர்: அமாவாசை ஒட்டி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை.;

Update: 2025-06-26 01:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மோரனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையை ம ஒட்டி மூலவர் அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர்அம்மனுக்கு வெள்ளிக் கவசம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.

Similar News