கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரம் – பல இடங்களில் சாரல் மழை
தென்மேற்கு பருவ மழையால் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்கிறது.;
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சிங்காநல்லூர், சரவணம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே தொடங்கிய மழை, தற்போது மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. வானிலை ஆய்வாளர்கள், அடுத்த 2-3 நாட்களில் இந்த நிலை தொடரும் எனவும், மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களுக்கு இது இயற்கை நீரூட்டமாக அமைந்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.