தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் பயன்பாடு அற்று பூட்டி கிடக்கும் நூலகத்தை நூலகர் நியமனம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கிளை கூட்டத்தில் தீர்மானம்

தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் பயன்பாடு அற்று பூட்டி கிடக்கும் நூலகத்தை நூலகர் நியமனம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2025-06-26 03:17 GMT
அரியலூர்,ஜூன்.25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்கச்சி பெருமாள் நத்தம் கிளை கூட்டம் குருமூர்த்தி இல்லத்தில் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அன்பழகன் சுப்பிரமணியன் குருமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் இராமநாதன் மாவட்ட மாநாடு பேரணியில் பங்கேற்பது குறித்து விளக்கி பேசினார். கிளை செயலாளராக குருமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தென்கச்சி பெருமாள் கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்து வள்ளலார் ஆலயம் வரையில் பழுதடைந்துள்ள சாலையை மேம்படுத்தி தரமான தார் சாலையாக அமைத்து தர வேண்டும். பல்லாண்டுகளாக பயன்பாடு அற்று பூட்டி கிடக்கும் நூலகத்தை நூலகர் நியமனம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கனமழையால் சேதமடைந்த எள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தென்கச்சி கீழக்குடிகாடு அன்னகாரன் பேட்டை சாலை வரை தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும். நான்கு ஆண்டுகளாக பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் கட்டி பதிவு செய்தோம். 2024 பருவ மழை பொய்த்து விட்டது.வேளாண்மை அதிகாரிகளின்உண்மைக்கு புறம்பான புள்ளி விவரங்களை பெற்று காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யும் நிலங்களில் காப்பீட்டு நிறுவனமும் வேளாண்மை அதிகாரிகளும் விளைச்சல் புள்ளி விவரம் எடுப்பதை நிறுத்தி விவசாயிகள் முன்னிலையில் உண்மையான புள்ளி விவரங்களை எடுத்து விவசாயிகள் பாதிக்காத வண்ணம் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தென்கச்சி வந்து செல்லும் நகர பேருந்து காலை ஏழு மணிக்கு இரவு 7 மணிக்கு நகர பேருந்து வந்து செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . 60 வயது முடிவடைந்த அனைத்து ஆண் பெண்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் நிபந்தனை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News