ஆதிதிராவிடர் பழங்குடியினர் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரப்பிடுக
ஆதிதிராவிடர் பழங்குடியினர் இடைநிலை ஆசிரியர்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.;
அரியலூர்,ஜூன் 26- தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் கடிதத்தி ன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தற்காலிகமாக நிரப்பிட கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, விளந்தை, இடைநிலை ஆசிரியர்-1, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வெத்தியார்வெட்டு, இடைநிலை ஆசிரியர்-2, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, பூவாணிப்பட்டு, இடைநிலை ஆசிரியர்-1, அமிர்தராயன்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, செட்டித்திருக்கோணம் .அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, ஜெயங்கொண்டம் .அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, த.கீழவெளி .அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, பாப்பாகுடி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, கங்கைகொண்டசோழபுரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, தூத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, , இடைநிலை ஆசிரியர்-1, மொத்தம் =11 பணி நியமன நெறிமுறைகள் / தகுதிகள் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியருக்கான கல்வித் தகுதி/வயது தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET PAPER–I) தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான முன்னுரிமைகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், (இல்லையெனில்) பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பர்வர்கள் (இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள். தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியருக்கான மாதம் ஊதியம் ரூ.12,000/- (ரூபாய் பணிரெண்டாயிரம் மட்டும்) வீதம் வழங்கப்படும். தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியருக்கான நியமனமானது, நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. அவ்வாறு பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படுவார்கள். அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியரக்ள் பணி நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2026 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும். தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.35-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூன் 27ம் தேதி மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.