நெல்லை மாநகர மேலப்பாளையம் அண்ணா விளையாட்டு மைதான மினி ஸ்டேடியம் தற்பொழுது அவல நிலையில் உள்ளது. 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் தற்பொழுது பல்வேறு பொருட்கள் திருடு போகியும், சுவர்கள் உடைக்கப்பட்டும் உள்ளதால் விளையாட்டு இளைஞர்கள் இன்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டு இதனை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.