செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்பு

செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற்றனர்.;

Update: 2025-06-26 10:41 GMT
அரியலூர், ஜூன்.27- தமிழ் நாடு மாநிலசட்டப் பணிகள் ஆனண குழுவின் வழிகாட்டுதல் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மலர் வாலண்டினா ஆலோசனை படியும் நேற்று பாதுகாப்பு சட்டம் குறித்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வரதராஜன் தலைமை வகித்தார். இம்முகாமில் போக்சோ சட்டம் குறித்தும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் வரதராஜ் தலைமை உரையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் ஏற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தான் நாம் அனைவரும் சிறப்பாக வாழ உதவுகிறது என்றும், நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் சட்டத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், நமக்கு சட்டம் தெரியாது என்று கூற இயலாது என்றும் கூறினார் . மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்று போக்சோ சட்டம் என்றும் இச்சட்டத்தை பொருத்தவரை குற்றம் செய்தவர் தான், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றங்களில் முறையிடும் போது அவர்களுடைய வாக்குமூலம் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் விளக்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் 1098 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு நமக்கு ஏற்பட்ட அநீதிகளை புகாராக கூறினால் கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு உதவுவார்கள் என்று விளக்கி கூறினார்.இம்முகாமில் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ், காமராஜ், கல்பனா, பாலு, செல்வமணி , காயத்ரி மற்றும் மூத்தவழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சட்டக் கருத்துரைகளை வழங்கினார்கள். மேலும் சுமதி தலைமை ஆசிரியர் சிறப்புரையாற்றினார். முகாமில் முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் புன்னகை நன்றி கூறினார்.

Similar News