பெரிய குளத்து பாளையத்தில் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி.
பெரிய குளத்து பாளையத்தில் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி.;
பெரிய குளத்து பாளையத்தில் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சி நிர்வாக அலுவலகங்கள் மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி வார்டு எண் 23ல் பெரிய குளத்து பாளையத்தில்,லட்சுமி நாராயண சமுத்திரம் கிராமம்இனாம் கரூர் பகுதியில் ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பிற்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் திறக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் கவிதா கணேசன் , துணைமேயர் தாரணி சரவணன்,மாநகராட்சி ஆணையர் சுதா , மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் , அரசு துறை அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்