ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் வீட்டில் வைத்து மது போதையில் ஆபாச நடனம் குறித்த வீடியோ மற்றும் மாரியம்மன் கோவிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் மேலும் பணிக்கு வந்த மற்ற அர்ச்சகர்கள் கணேசன்,வினோத் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அதன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அச்சகர்களை தேடி வருகின்றனர் மேலும் ஆபாசமாக நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அர்ச்சகர்கள் மீது பாரபட்சம் இன்றி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பெண்களை பாதுகாக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.