நெல்லை மாநகர முருகன்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் ஏதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்ட பாலத்தின் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் சீதலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை ஏராளமான மாணவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இன்று வீடியோ மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.