காவலரை தள்ளி விட்டு தப்பி சென்ற கைதி
காவலரை தள்ளி விட்டு தப்பி சென்ற கைதி;
திருவள்ளூர்: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனிப்படை காவலர் ஆனந்தகுமார் என்பவர் திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜாவை கைது செய்ய விரட்டி வந்த போது அவர் நண்பர்கள் உதவியோடு காரில் ஹாலிவுட் சினிமாப்பட பாணியில் ஹெல்மெட் அணிந்த நிலையில் கார் பின்பக்க பேலட் மீது எகிரி குதித்து ஹாலிவுட் படத்திற்கு நிகராக பிடிக்க முற்பட்டபோது காரில் இருந்தவர்கள் மயிலாப்பூர் காவலர் ஆனந்த குமாரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்ற சம்பவம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருப்பாச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் திருவள்ளூர் தாலுகா போலீசார் தப்பிச்சென்ற நபர் குறித்தும் அவரோடு காரில் இருந்தவர்கள் விவரத்தையும் விசாரித்து வருகின்றனர் திருவள்ளூர் அருகேயுள்ள திருப்பாச்சூரில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வெளியே ஜன்னலை பிடித்துக் கொண்டு தொங்கியபடி சாலையில் சென்ற நபர். சினிமா காட்சிகளை மிஞ்சும் பரபரப்பு காட்சிகள் சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேல் சென்ற நிலையில் காரில் இருந்து கீழே விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் காரில் இருந்து விழுந்த நபர் தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரபல ரவுடியான தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜா வை கைது செய்ய வந்தபோது தப்பி ஓடி அவரை தனிப்படை காவலர் ஆனந்த் குமார் பிடிக்க முயற்சித்த காட்சிகள் என தெரியவந்துள்ளது காரில் இருந்தவர்கள் விவரங்கள் குறித்து சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது