அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது.
கைது;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூலிப், பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் அக்கீமை கைது செய்ததோடு கடையிலிருந்து ஆறு கிலோ அளவில் கணேஷ் கோயிலை கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு வாங்கப்பட்டது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.