அமராவதி ஆற்றுப்பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் படுகாயம்
அமராவதி ஆற்றுப்பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் படுகாயம்;
அமராவதி ஆற்றுப்பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா தேவன் மனைவி கவிதா வயது 43. இவர் ஜூன் 25ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஜவகர் பஜாரில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் 5 ரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும்போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ஆர் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விதுல் வயது 21 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் , கவிதா ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கவிதாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த கவிதாவின் தந்தை ராமசாமி வயது 71 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் போட்டி விபத்து ஏற்படுத்தியது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.