தலைமறைவாக உள்ள பூசாரிகள் வீடியோ வெளியீடு

தலைமறைவாக உள்ள பூசாரிகள் வீடியோ வெளியீடு;

Update: 2025-06-27 15:34 GMT
கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், ஆபாச நடனம் ஆடிய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூசாரிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வீடியோவை சபரிநாதன் என்பவர் வெளியிட்டதாக பேசி மற்ற இரண்டு பூசாரிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பூஜைக்கு தற்காலிக உதவியாளர்களாக இருந்த கோமதிநாயகம், வினோத், கணேசன், சபரிநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து அத்துமீறி விளையாடினர். மேலும் கோமதி விநாயகம் வீட்டு அறைக்குள் பூசை செய்யும் உடையுடன் இருந்தவாறு ஆபாச நடனம் ஆடிய வீடியோ வெளியானது. இந்த வீடியோ வைரலான நிலையில் பக்தர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையிலும், பெண்களிடம் அத்து மீறி நடந்து கொண்டது மன உளைச்சலை ஏற்படுத்தியதால் பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டியராஜன் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், பூசாரிகள் மீது 67 ( a ), 294 ( b ), 599, 296, 79 ஆகிய இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பூசாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளிகள் என காவல்துறையினர் தெரிவித்த வினோத் மற்றும் கணேசன் ஆகியோர் இணைந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் முன்னாள் அர்ச்சகர் ஹரிகரன் மகன் சபரிநாதன் என்பவருக்கு தங்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் தாங்கள் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கிலும் பழைய வீடியோவை வெளியிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்துள்ளதாகவும் அந்த வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளனர்.

Similar News