முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெறாதவர்கள் விபரம் இணையத்தில் பதிவேற்றம் 

இணையத்தில் பதிவேற்றம் ;

Update: 2025-06-27 16:30 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை பெறாத தகுதியான பெண் குழந்தைகளின் விவரம் சமூக நல ஆணையரகத்திடமிருந்து 3 பட்டியல்களாக வரப்பெற்று, http://thanjavur.nic.in என்ற தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  எனவே, இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பயனாளிகள் தங்களது அசல் வைப்புத்தொகை ரசீது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு முதிர்வுத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News