இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்;

Update: 2025-06-27 20:25 GMT
லால்குடி நாகமைய்யாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் சஞ்சய் (21) மனநலம் பாதிக்கப்பட்டவா். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்தாா். ஏற்கெனவே சஞ்சய் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை அனைவரும் தூங்க சென்ற நிலையில், சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில் லால்குடி போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News