சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம்

விளிம்பு நிலை தொழில் முனைவோர் கோரிக்கை மனு;

Update: 2025-06-28 03:50 GMT
சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இடம் விளிம்புநிலை தொழில்முனைவோர் பொதுநலச்சங்க தலைவர் தேவராஜ் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார் அதில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரில் வெள்ளி, பிரிண்டிங், பைண்டிங், சாலையோர உணவு கடைகள், வெல்டிங் பட்டறை, லேத் பட்டறை உள்பட சிறு, குறு தொழில்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி செலுத்துகிறோம். ஒவ்வொருவரும் நாங்கள் செய்கிற தொழிலுக்கு தகுந்தாற் போன்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்றிதழ், தொழில் சான்றிதழ் பெற்று அதற்கான ஆண்டு வரி கட்டுவதுடன் எங்களது அன்றாட செலவினங்களை மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறோம். இதற்கிடையே தனி வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் கட்டாய வரி வசூல் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். அன்றாட பிழைப்புக்கே நாங்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் எதற்கெடுத்தாலும் வரி வசூலிப்பது எங்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே கட்டாய வரி வசூல் என்ற நடவடிக்கையை முறைப்படுத்தி விளிம்பு நிலை தொழில் முனைவோர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News