புதுகை, ஆலங்குடி அடுத்த கீழாத்துரைச் சேர்ந்தவர் கீதா (40). இவர் பைக்கில் அனவயலில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது, கீழாத்தூர் நாடியம்மன் ஆர்ச் அருகே உள்ள சாலையில் அவருக்கு எதிரே டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த விஜய் (28) மோதியதில் கீதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.