கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2025-06-29 01:47 GMT
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஜனார்த்தனன் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் உடற் கல்வியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Similar News