திருச்சி: முதலுதவி சிகிச்சை குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
சட்டம், ஒழுங்கு மற்றும் ஆயு தப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.;
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் ஆயு தப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த பயிற்சியில் சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை காவல்துறையினர் கையாளும் முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்து சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த சுமார் 300 பேர் பங்கேற்றனர். பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் சிறப்புரையாற்றினார். அப்போது, முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றியும், அதில் காவல்துறையின் இன்றியமையாத பங்களிப்பு பற்றியும் விளக்கி கூறி, பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.