தமிழகம் அதிக அளவு போதைப்பொருள் பயன்படுத்தும் மாநிலமாக உள்ளது
எச்.ராஜா குற்றச்சாட்டு;
திருவெறும்பூர் அருகே பாலாஜிநகரில் உள்ள தனியார் மஹாலில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட பா.ஜனதா தலை வர் ஒண்டிமுத்து தலைமை தாங்கினார். இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரவலை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்துரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது, அதுவும் வெடிக்கவில்லை. மற்ற டிரோன்கள் வானிலேயே தகர்க்கப்பட்டது. போதைப்பொருள் பல ஆயிரம் கோடிக்கு கடத்தியவர்கள் வெளியில் உள்ளனர். தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் போதைப்பொருள் பயன்ப டுத்தியதாக ஒரு வழக்கு கூட போடவில்லை. இந்திய அளவில் அதிக போதைப்பொருள் பயன்படுத்திய மாநிலமாக பஞ்சாப் இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் அதிக அளவு போதைப்பொருள் பயன்ப டுத்தும் மாநிலமாக உள்ளது. வருங்கால சமுதாயத்தை போதைப்பொ ருளுக்கு அடிமையாக்கி அழிக்க பார்க்கிறது. இந்த அரசு தொடர்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து என்றார்