ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கமுதி அருகேயுள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.;

Update: 2025-06-29 04:20 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருநாழி காவல் சரகத்திற்குள்பட்ட டி.எம்.கோட்டை}சாயல்குடி விலக்கு சாலையில் பெருநாழி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 39.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டாலங்குளத்தைச் சேர்ந்த போகுசாமி மகன் சுப்புராஜ்(32), இவரது உறவினர் ராஜரத்தினம் மகன் சங்கர்(28) உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Similar News