பாலவிடுதி பகுதியில் மது விற்ற இரண்டு பேர் கைது
பாலவிடுதி பகுதியில் மது விற்ற இரண்டு பேர் கைது;
பாலவிடுதி பகுதியில் மது விற்ற இரண்டு பேர் கைது கடவூர் தாலுகா சேர்வைக்காரன் பட்டி மற்றும் அய்யம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற பாஸ்கர் (28) மற்றும் பழனிச்சாமி (37) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 9,720 மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.