கள்ளத்தனமாக மது விற்ற நபர் கைது
மது பாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்;
சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை கைது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படையினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் அரும்பாவூர் மாதா கோயில் பகுதியில் சேர்ந்த மருதபாண்டி (39) என்பவர் தொண்டமாந்துறை ஓயின். ஷாப் அருகில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்த நபரை தனிப்படையினர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி நபரை கைது செய்து எதிரி மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 180 ml அளவுள்ள எட்டு வகையான 240 பாட்டில்கள் மற்றும் 650 ml அளவுள்ள (Beer - 40 பாட்டில்கள்) என மொத்தம் 280 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அரும்பாவூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.