ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று துவங்கியது.....*

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று துவங்கியது.....*;

Update: 2025-06-29 11:52 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று துவங்கியது..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று கணபதி ஹோமம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில். சுமார் நூறு ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி மிக விமர்சையாக நடைபெறும். மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இங்கு பூ இறங்கி நேர்த்திக் கடனை செலுத்துவார். மேலும் ஆடி வெள்ளி தை வெள்ளி உள்ளிட்ட தமிழ் மாதங்களின் முக்கியமான வெள்ளிக்கிழமைகளில் இங்கு நடைபெறும் 108 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கணபதி ஹோமம் யாகசாலை பூஜையுடன் இன்று திருக்கோவிலின் வளாகத்தில் கும்பாபிஷேக விழா முதல் கால பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெறும். வரும் புதன் கிழமை 02.06. 2025 ஆம் தேதி நான்காம் காலை யாகசாலை பூஜை துவங்கி காலை சுமார் 7. 35 மணிக்குள் ஸ்ரீ பெரிய மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணை நடைபெறுகிறது. கும்பாபிஷேத்துக்கான ஏற்பாடுகள் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News