தமிழ் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியன் நினைவேந்தல்

நினைவேந்தல்;

Update: 2025-06-29 13:35 GMT
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு, துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள்  சி.அமுதா, மரு பெ.பாரதஜோதி  தலைமையிலும், பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை  முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன் நினைவிடத்தில் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) இரா.சு.முருகன், கண்காணிப்பாளர் சி.பஞ்சநாதன், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவலர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News