ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் பயிற்சி முகாம்
ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் பயிற்சி முகாம்;
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் திமுக தெற்கு மாவட்ட சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் நகர் மன்ற தலைவர் குருசாமி, திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.