கோவை: பறந்து போ திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு!
இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா, பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் நடைபெற்றது.;
இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா, பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் நடைபெற்றது. படத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ராம், சிரிப்பும் உணர்வும் கலந்து குழந்தைகளுக்காக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், குறிப்பாக அப்பாக்கள், குடும்பத்துக்காக தியாகம் செய்கிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது. ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகிறது. Box Office வெற்றியும் வேண்டும், என தெரிவித்தார். இயக்குநர் ராஜேஷ், எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் படம் குறித்து பாராட்டுகள் தெரிவித்தனர்.