மாதிரி பாராளுமன்றம் : தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து விவாதித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்ற மாதிரி பாராளுமன்ற நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர்களுடன் விவாதித்தார்.;
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்ற மாதிரி பாராளுமன்ற நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர்களுடன் விவாதித்தார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு அரசியல் புரிதலையும், நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது என அவர் தெரிவித்தார். நடிகர்களைவிட அரசியல் தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினராக ஆசைப்பட்டால் அது நிச்சயம் நனவாகும் என்றும் கூறினார்.