புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவர் கைது;

Update: 2025-06-29 19:16 GMT
மணப்பாறை காவல் சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கால்நடை வார சந்தை பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பொ. சீத்தப்பட்டியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் முனியப்பன் (37), அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்த நிலையில் பிடிபட்டாா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Similar News