திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீசார் தீவிர சோதனை-பரபரப்பு;
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.28 மணிக்கு திருச்சி விமான நிலையத்தின் பொதுமக்கள் குறைதீர் இ-மெயிலுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட் டிருந்தது. இது பற்றி அதிகாரிகள் உடனடியாக மத்திய தொழில் பாது காப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விமான நிறுவன அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும், அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் முகவரியினை சேகரிக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட் டது. அங்கு வந்த போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுடன் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைத்திருப்ப தாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயிலுக்கு தகவல் அனுப்பியவர் யார்? என்பது குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.