ஊட்டியின் மையப்பகுதியில் பள்ளிகள் அமைந்த குல்முகமது லைன் சாலையில் பல மாதங்களாக வழிந்தோடும் கழிவுநீர் குழந்தைகள் பொதுமக்கள் அவதி!

நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

Update: 2025-06-30 14:53 GMT
ஊட்டியின் மையப்பகுதியில் பள்ளிகள் அமைந்த குல்முகமது லைன் சாலையில் பல மாதங்களாக வழிந்தோடும் கழிவுநீர் குழந்தைகள் பொதுமக்கள் அவதி! நீலகிரி மாவட்டம் ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள குல்முகமது லைன் சாலை பள்ளிகள் மற்றும் நகராட்சிக்கு செல்லம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை இதில் பல மாதங்களாக தினமும் வழிந்தோடும் கழிவுநீர், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் இயல்பு வாழ்வை பெரிதும் பாதித்துள்ளது. தினசரி பாதிக்கப்படும் மாணவர்கள்: இந்த சாலையை வழியாக பல்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் காலையில் சாலையில் நடந்து செல்லும் போது, • வழுக்கி விழும் நிலை • அழுக்கு நீரில் காலடிகள் மிதப்பது • உடல் நலக்கேடுகளுக்கான அபாயம் என்னும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். பொதுமக்கள் கூறுவது: “வீட்டின் கழிவுநீர் நேரடியாக சாலைக்கே வந்து சேர்கிறது. அதே சாலையில் நாங்கள் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது வேதனை யாகும் பசுமை ஊட்டிக்கு இது போன்று கழிவுநீர் வழிகின்ற சாலை ஒரு பொதுமக்களை பழிவாங்கும் காட்சியாகும் சுகாதார சிக்கல்கள்: • குழாய்கள் கசியும் நிலைமை தொடர்ந்து நீடிப்பதால், சாலையில் நிலைத்து தினமும் ஓடும் கழிவுநீர் • புழுக்கள், கொசுக்கள் பெருகும் சூழ்நிலை • வீதி முழுவதும் துர்நாற்றம் வாசனை நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? பல முறை நகராட்சி அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நடவடிக்கை இல்லை, “விரைவில் பணிகள் தொடங்கப்படும்” என்ற கூற்றைதவிர நடவடிக்கை எதுவும் இல்லை என மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். ஊட்டியின் மாணவர்கள் கல்விக்காக பயணிக்கும் சாலையில், கழிவுநீர் வழிந்தோடும் நிலைமை தொடரும் போது, அது கல்வி மட்டுமல்ல, சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது. நிர்வாகம் விழித்து செயல்பட வேண்டிய காலம் இது என பொதுமக்கள் பெரம் அதிருப்தி தெரிவித்தனர்

Similar News