மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒற்றைக் காட்டு யானை உலவி வந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன

வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை;

Update: 2025-06-30 14:57 GMT
மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒற்றைக் காட்டு யானை உலவி வந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன நீலகிரி மாவட்டம் குன்னூா் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை உலவி வந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. உணவு, தண்ணீா் தேடி மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து வந்து குன்னூா் வனப் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை திடீரென பா்லியாறு பகுதியில் சாலையில் உலவியது. இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் சாலையில் உலவிய யானை பின்னா் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

Similar News