திருச்சி : போக்ஸோவில் இளைஞா் கைது
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.;
திருச்சி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (34), பெயிண்டா். இவா், பக்கத்துவீட்டு சிறுமி குளிப்பதை எட்டிப் பாா்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.