கோவையில் காற்றாலை இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
கோவை மாவட்டம் செலக்கரசல் பகுதியில் உள்ள தனியார் காற்றாலை மில் ஒன்றில் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோவை மாவட்டம் செலக்கரசல் பகுதியில் உள்ள தனியார் காற்றாலை மில் ஒன்றில் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவ, பிரம்மாண்ட ரெக்கைகள் உடைந்து கீழே விழுந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், தகவல் விரைவில் பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.