கோவை: கல்வி கனவுக்கு உதவிய பேரூராட்சி தலைவர் !

12ம் வகுப்பு முடித்தும் கல்வியைத் தொடர முடியாமல் இருந்த மாணவி சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் செயலாளர் நேரில் சென்று உதவிகளை வழங்கினர்.;

Update: 2025-07-01 01:50 GMT
கோவை சூலூர் கதிரவன்நகரைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்தும் கல்வியைத் தொடர முடியாமல் இருந்த மாணவி கீதாவுக்கு, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் செயலாளர் நேரில் சென்று உதவிகளை வழங்கினர். மேலும், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்புக்குச் சேர்க்கை செய்து, மாணவியின் கல்வி தொடர வழிவகுத்தனர். சமூக அக்கறையுடன் மேற்கொண்ட இந்த செயலை பாராட்டிய மாணவியும், பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். பொதுமக்களும் பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News