திருச்சி அருகே வயிற்று வலியால் அவதிபட்டவர் தற்கொலை
புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை;
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே உள்ள குண்டூர் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (39). இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். சகோதரியின் வீட்டில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.