முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் -கலெக்டர் தகவல்
முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் -கலெக்டர் தகவல்;
முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரா்களின் தென் பிராந்திய மறுவாழ்வு இயக்ககம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமின்போது, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, சுய விவரப் பட்டியல் (5 பிரதிகள்) ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 020-2634 1217 மற்றும் 011-2086 2542 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.