பயணிகள் நிழல் குடை அமைக்க பூமி பூஜை
மதுரை அருகே புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பூமி பூஜை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சின்னபூலாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையில் இன்று (ஜூலை.1)சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்