உசிலம்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மதுரை உசிலம்பட்டி நகர்மன்ற கூட்டத்தில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;

Update: 2025-07-01 15:10 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்ட நிலையில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தருவதில்லை என திமுக நகர் மன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர். மேலும் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கூடுதலாக 1 ஏக்கர் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் அரசு வழக்கறிஞர் எந்த முயற்சியும் எடுத்தாக தெரியவில்லை, நகராட்சியின் பணம் விரையமாகிறது என அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.

Similar News