ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது

வரலாற்று சிறப்பும் ஆன்மீக வளர்ச்சியும் கொண்ட மயிலாடுதுறை மாவட்டம் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் பாராட்டு;

Update: 2025-07-02 05:11 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் சோழம்பேட்டை பகுதியில் நடைபெற்ற தெருமுறை பிரச்சாரக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் மூவலூர்மூர்த்தி தலைமை வகித்தார், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார், வழக்கறிஞர் எம்பிஎம்பாலு, துணைச்செயலாளர் சிவக்குமார், மாவட் பிரதிநிதி இளஞ்செழியன், மாவட்டக்கழக பிரதிநிதி குமாரசாமி, முன்னிலை வகித்தனர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம், சத்தியசீலன், குத்தாலம் அன்பழகன் மற்றும்  மாவட்ட  இளைஞர் அணி அமைப்பாளர் மருது, மற்றும் பலர் கலந்துகொண்டனர், தலைமைக்கழக இளம் பேச்சாளர் அருண்குமார், தமைக்கழக பேச்சாளர் கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன் சிறப்புரையாற்றினர். கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன் பேசுகையில், மயிலாடுதுறை என்பது சைவல் வளர்த்த ஞானசம்பந்தர் அவதரித்தது, பொன்னியின் செல்வன் கதை எழுதிய கல்கி பிறந்தது, குன்றக்குடி அடிகளார் பிறந்த மாவட்டம் நாளும் தமிழ் வளர்த்த திருவாவடுதுறை மற்றும் தருமை ஆதீனங்கள் அமைந்த இடம், டாக்டர உதயமூர்த்தி பிறந்த ஊர், இதற்கும்மேலாக கம்பராமாயணத்தை அளித்த கம்பன் பிறந்த ஊர், இப்படி சொல்லிக்கோண்டே போகலாம், இந்த மயிலாடுதுறைமாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூடடணி கைப்பற்றியுள்ளது, அதே போன்று 2026 தேர்தலிலும் 3 தொகுதிகளையும் கைப்பற்றி தளபதியிடம் ஒப்படைக்கவேண்டும்,  திமுக சும்மா வந்துவிடவில்லை,   1969ல் பதவியேற்ற கலைஞர் 72ல் மிகப்பெரிய சங்கடத்தை சந்தித்தார், எம்ஜிஆர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார் அவருடன் முக்கிய தலைவர்கள் சென்றனர், 1975ல் இந்திராகாந்தி அவசரநிலை பிரகடனத்தை கொண்டுவந்தபோது   தளபதியை கைதுசெய்து சிறைச்சாலையில் அவரை சித்திரவதை செய்தனர், அவரை அடித்துக் கொல்ல முயன்றபோது சிட்டிபாபு  தடுத்து அடியை, தான் வாங்கிக்கொண்டு உயிர்நீத்தார், ஆட்சி கலைக்கப்பட்டது, 1994ல் வைகோவால் தனிகட்சி துவங்கியதால் கலைஞர் துவண்டுவிடவில்லை, ஜெயலலிதா அரசால் கலைஞர் கைதுசெய்யப்பட்டு நள்ளிரவில் இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார், கலைஞர் காத்திருந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தார், அவரது எழுத்தாலும், பேச்சாலும் வசனத்தாலும் மக்கள் நலப்பணியாலும் இன்றுவரை திமுகவை அசைக்க முடியாமல் உள்ளது, இன்றைக்கு தளபதி ஒப்பற்ற ஆட்சியை நடத்தவருகிறார், பெண்களுக்கான திட்டங்களை தீட்டி அவர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார், ஆகவே என்றைக்கும் தளபதி பக்கம் நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார், முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மதுஅஸ்மர் நன்றி கூறினார்.

Similar News