ரத்த தான முகாம்

முகாம்;

Update: 2025-07-02 05:13 GMT
வருவாய்த்துறை தினத்தை முன்னிட்டு, சங்கராபுரம் வருவாய்த்துறை மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தாலுகா அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயன், தலைமையிடம் துணை தாசில்தார் செங்குட்டுவன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன், தலைமை நில அளவர் நந்தகோபாலன் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் வரதராஜன், வட்ட தலைவர் நிமிலன் வாழ்த்துரை வழங்கினர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் கலந்துகொண்டு ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வைத்தியநாதன், சுகாதார பணியாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். முகாமில் 25 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. டாக்டர் சுகன்யா நன்றி கூறினார்.

Similar News