சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
திருமங்கலம்: திருமங்கலம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் 50. இவரது மகன் பாலாஜி திருமங்கலம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ஜூன் 28ல் டூவீலரில் இருவரும் திருமங்கலத்திற்கு சென்றனர். கிழவனேரி அருகே எதிரே வந்த வேன் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து ரோட்டில் கிடந்தனர். அப்போது சேடப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்காக சென்ற கலெக்டர் பிரவீன் குமார் ஆம்புலன்ஸ்காக காத்திருந்த இருவரையும் மீட்டு திட்ட அலுவலரின் காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்ததால் அவர்கள் ஆம்புலன்ஸில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.