பேரூராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு.
மதுரை அலங்காநல்லூர் புதிய பேருந்து நிலையத்தால் பேரூராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் நேரு மற்றும் மூர்த்தி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த நிலையில், பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 வணிக வளாகங்கள் ஏலம் விடாத நிலையில், ஒரு கடைக்கு ரூபாய் 5000 வீதம், மாதம் ரூபாய் ஒரு லட்சம் வரை அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், பேருந்து நிலையம் திறந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், இதுவரை பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அலங்காநல்லூர் பேரூராட்சியில் பலமுறை மனுக்கள் வழங்கியும், ஏலம் விடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.