ஜேசிபி, போர்வெல் கனரக வாகனங்களுக்கு தடை
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல், உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ அல்லது இயக்கினாலோ ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.