ஸ்ரீ காசி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
சேந்தாங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா;
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கூட்ரோடு அடுத்த சேந்தாங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை அன்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், உள்ளிட்ட பூஜாளுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் இணை யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமதரிசனம் செய்தனர்.