காளியம்மன், பகவதி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா
கொடைரோடு அருகே நாகைய கவுண்டன்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நாகைய கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. ஆலய வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற யாக வேள்வி பூஜையை தொடர்ந்து புனித நீர் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விழா நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.