ஓரணியில் தமிழகம் என்ற கோட்பாடு குறித்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

ஓரணியில் தமிழகம் என்ற கோட்பாடு குறித்து திண்டுக்கல் திமுக அலுவலகத்தில் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது;

Update: 2025-07-02 12:00 GMT
ஓரணியில் தமிழகம் என்ற கோட்பாடு குறித்து திண்டுக்கல் பழைய நீதிமன்றம் எதிரே கலைஞர் மாளிகை திமுக அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஓர் அணியில் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும். மத்திய அரசு கல்விக்கே நிதி கொடுப்பதில்லை. ஒரே கட்சி, ஒரே நாடு என மத்திய அரசு நினைக்கிறது. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது தான். ஆனால் பாசிச ஆட்சி நடத்துகிறது மத்திய பாஜக அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு செயல் படுகின்றனர். ஓரணியில் தமிழகம் என்ற கோட்பாடு தற்போது துவக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களை ஓரணியில் கொண்டு வந்து உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் ஓரணியில் தமிழ் நாடு கோட்பாடு என தெரிவித்தார் மேலும் திமுகவிற்கு 10 சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லை என நத்தம் விஸ்வநாதன் கூறியது குறித்த கேள்விக்கு வாக்கு வங்கி இல்லை என்று எப்படி தெரியும். எப்படி கணக்கு போட்டார். கணக்கு எதுவும் எடுக்கப்பட்டதா? சர்வே எடுக்கப்பட்டதா? அல்லது மக்களின் மனநிலையை அறிந்து கூறுகிறாரா? எப்படி சொல்கிறார் என தெரியவில்லை. கூட்டல் கணக்கு அவருக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். திமுகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என்ற கேள்விக்கு மதிக்காமல் நான் எப்படி அமைச்சராக. மூன்று முறை இருக்கிறேன். ஒரே தொகுதியில் போட்டி போட அனுமதியை அளித்துள்ளனர் அப்போது எந்த அளவு மதித்து உள்ளனர். உயர்ந்த மரியாதை வைத்திருந்ததால் தான் வாய்ப்பு கொடுத்தார்கள். என் மகனுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள். வேடசந்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் குப்பையில் போடப்பட்டது குறித்த கேள்விக்கு ஜெயலலிதா புகைப்படம் எங்கேயும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் தான் உள்ளது. ஜெயலலிதாவை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார். நானும் அவரின் புகைப்படத்தை தேடி பார்க்கிறேன். அவரது சிலையை எடுத்துவிட்டு எடப்பாடி சிலையை வைத்தாலும் வைப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி படம் தான் பெரியதாக இருக்கிறது. முரட்டு உருவம். எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறினார். தற்பொழுது பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டார்

Similar News